TNPSC CCSE 10th TAMIL TEST - 6
1. "சீக்கிரம் செல்லுக நேர்வழியில் " என்னும் பாடலை இயற்றியவர்?
அ) சாலை . இளந்திரையன்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) ந.காமராசன்
ஈ) காத்தவராயன்
2. "முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை" என்பது?
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) தொல்காப்பியம்
3. "விரல்கள் பத்தும் மூலதனம் " என்னும் பாடலின் ஆசிரியர்?
அ) ந.காமராசன்
ஆ) பாரதிதாசன்
இ) தாராபாரதி
ஈ) சுரதா
4. "லிப்ரா" என்னும் சொல்லின் பொருள்?
அ) ஓலைச்சுவடி
ஆ) நூல்
இ) புத்தகம்
ஈ) நூலகம்
5. தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்றவர்?
அ) முனைவர்.எமினோ
ஆ) கெல்லட்
இ) கால்டுவெல்
ஈ) மாக்சுமுல்லர்
6. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) பெரியபுராணம்
ஆ) திருத்தொண்டர் புராணம்
இ) புறநானூறு
ஈ) தொண்ட மண்டல சதகம்
7. எல்லா அடிகளையம் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது?
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
இ) நிலை மண்டில ஆசிரியப்பா
ஈ) இணைக்குறள் ஆசிரியப்பா
8. பஞ்சமர் பள்ளிகளை தோற்றுவித்தவர்?
அ) அயோத்திதாசப் பண்டிதர்
ஆ) அரிமர்த்தன பாண்டியன்
இ) காந்தியடிகள்
ஈ) அம்பேத்கர்
9. மண்ணாசை கருதி போருக்கு செல்வது?
அ) உழிஞைத் திணை
ஆ) காஞ்சித் திணை
இ) வாகைத் திணை
ஈ) வஞ்சித் திணை
10. பாலை நிலத்திற்குரிய பறவை
அ) கிளி
ஆ) நாரை
இ) செங்காகம்
ஈ) புறா
Sahara10thTamilEnglish.blogspot.com