Sunday, 31 December 2017

10th TAMIL TEST - 2


TNPSC CCSE 10th TAMIL TEST  - 2

1.  "விரை" பொருள் தருக?
அ) அணிகலன்
ஆ) மணம்
இ) பெருகி
ஈ) உடல்

2. "சதகம் " என்பதன் பொருள்?
அ) சூல்நிலை ஓட்டம்
ஆ) ஐந்நூறு பாடல்கள்
இ) நூறு பாடல்கள்
ஈ)  கதம்பங்கள்

3. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து" என்னும் பாடலை இயற்றியவர்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ)  மாணிக்கவாசகர்

4. திருக்குறளை 1812-ல் பதிப்பித்து வெளியிட்டவர்?
அ) கால்டுவெல்
ஆ) அறிஞர் கிப்ரான்
இ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
ஈ)  பரிதிமாற்கலைஞர்

5. திருவாசகமும், திருக்கோவையும் சைவத்திரு முறைகளில் எந்த திருமுறைகளில் இடம் பெற்றுள்ளது?
அ) 7 -ம் திருமுறை
ஆ) 8 -ம் திருமுறை
இ) 5 -ம் திருமுறை
ஈ)  4 -ம் திருமுறை

6. "திணைமாலை நூற்றைம்பது " என்னும் நூலை இயற்றியவர்?
அ) செயங்கொண்டார்
ஆ) நல்லாதனார்
இ) மிளைகிழான் நல்வேட்டனார்
ஈ)  கணிமேதாவியார்

7. சமண சமயத்தவர் வாழ்ந்த காலம்?
அ) கி.பி. 5-ம் நூற்றாண்டு
ஆ) கி.பி. 6-ம் நூற்றாண்டு
இ) கி.பி. 7-ம் நூற்றாண்டு
ஈ)  கி.பி. 8-ம் நூற்றாண்டு

8. ஏலாதி எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?
அ) 61
ஆ) 71
இ) 81
ஈ) 91

9. "என்றுமுள தென்தமிழ்" என்றவர் யார்?
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) கம்பர்
இ) திரு.வி.க
ஈ)  கமில்சுவலபில்

10. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்றவர்?
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) முனைவர். எமினோ
ஈ) திரு.வி.க
Sahara10thTamilEnglish.blogspot.com

No comments:

Post a Comment